Sunday, October 30, 2011

கேட்க செவி உள்ளோர் கேட்கட்டும் ..

ஞாயிறு,30.10.2011
"படித்தவன் சூது பண்ணினால் 
போவான் போவான் 
ஐயோ என்று போவான் " - பாரதியின் இந்த சாபம் 
படித்தவர்கள் மீதான கோபம் அல்ல, 
இந்த சமுகத்தை எத்தனை அதிகமாய் அன்பு செய்தான் என்பதன் வெளிப்பாடே ...

இன்று படித்தவன் சூது சமூகத்தில் எத்தனை சீரழிவை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாக ... சட்டம் படித்து 2G இன் சூதாட்டம், IAS லெவல் அதிகாரிகளின் தமிழக தேர்வு துறை முறை கேடுகள், மருத்துவம் படித்தவனின் போலி மாத்திரைகள் என வருவதை பார்த்தால் இது பாரதி சொன்னது போல ஐயோ என மக்கள் தான் பாடுபடுகிறார்கள் ... என்ன சொல்ல ...

இன்றைய செய்திதாள் அனைத்தும் அணு சக்தி துறை தலைவரின் பொய் உரைகளால் நிரம்பியுள்ளது. கூடங்குளம் பணிகள் நடை பெறாவிட்டால் மக்களுக்கு தான் பாதிப்பு ஏற்படும்.. 
உரேனியம் நிரப்பி வைத்துளோம்... 
அதை பாதுகாக்க விட்டால் ரொம்ப ஆபத்து ...
என்று அணு உலை நிறுத்தி பத்து நாட்களுக்கு பிறகு தான் அவருக்கு நினைவுக்கு வந்திருகிறது. 

இவோலோவு ஞாபக சக்தி நிறைந்த அணு விஞ்ஞனிகளை வைத்து அணு உலையை ஓட்டினால் நாம கதி எவ்ளோ நல்ல இருக்கும் என்று பாருங்கள். எல்லோரும் செத்து கரியாய் போய் பத்து மாசம் கழித்துதான் என்ன நடந்தது என்றே கேட்பார்கள். இவர்கள் நோக்கமேலம் தமிழனை எப்படியாவது சுத்தமாக அழித்து விட வேண்டும் சோனியா உள்ளம் குளிர வேண்டும் என்பது தான். 

வெளி நாட்டு தூண்டுதல் என்று சத்தம் போடுகிறார்கள் அணு உலை மட்டும் உள் நாட்டு தூண்டுதலால் தான் செயல் படுகிறதோ ? ருசிய போட்ட கட்டளை மன்மோகன் அடிபணிந்து செயல் படுகிறார். தான் செய்த தவறை மறைக்க மற்றவர்கள் மேல் போடும் முட்டால் தனம் படிக்காதவனில் இருந்து படித்த உயர்ந்த பதவியில் இருப்பவர் வரை அனைவரிடமும் உள்ளது வேடிக்கைதான் ..

வெறும் வெற்று கூச்சலும், வறட்டு பிடிவாதாமும், மற்றவர் மீது பழி போடுதலும் எந்த சிக்கலுக்கும் சரியான தீர்வு கொண்டுவராது என்பதை படித்த முட்டாள்கள் உணர வேண்டும்.
 
வளர்ச்சி என்பது மக்களின் பிணத்தின் மேல் கட்டப்படும் கல்லறை அல்ல ... 
மக்களுக்காக மக்களால் எழுப்ப படும் கோவிலை போன்றது ... 
எல்லா தரப்பினரும் முழு ஈடுபாட்டோடு அதில் ஈடுபடும் போதே 
ஒட்டு மொத்த வளர்ச்சி சத்தியம் என்பதை ஆட்சியில் இருப்போர் உணரட்டும். 
மாற்றங்கள் சாதாரண மக்களால் மட்டுமே கொண்டுவரப்படும் என்று 
வரலாறு கற்று கொடுத்ததை தலைவர் என்று சொல்பவரெல்லாம் நினைவில் கொள்ளட்டும்...

தமிழகம் புதிய வரலாற்றை எழுதுகிறது ..
அது பாமர மக்களால் எழுதப்படுகிறது என்று உலகம் உற்றுபார்க்கிறது ..
கேட்க செவி உள்ளோர் கேட்கட்டும் ...

No comments:

Post a Comment